• Breaking News

    IPL 2025: சென்னையை துவம்சம் செய்த ஹைதராபாத்..... கண்ணீர் விட்டு கதறிய நடிகை ஸ்ருதி ஹாசன்

     


    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. நேற்று நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. சென்னை அணியில் அதிகபட்சமாக டிவால்ட் பிராவிஸ் 43 ரன்கள் வரை எடுத்தார்.ஹைதராபாத் அணியில் ஹர்ஷல் படேல் அதிகபட்சமாக 4 விக்கெட் வரை வீழ்த்தினார். 

    இதை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை வீழ்த்தி முதல் முறையாக ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியை காண திரை பிரபலங்கள் பலர் சென்றிருந்தனர்.அதன்படி நடிகர் அஜித், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ஷாலினி மற்றும் நடிகை சுருதிஹாசன் உட்பட பலர் சென்றிருந்தனர்.

     இந்த போட்டியின் போது சென்னை அணி தோல்வி அடைந்ததால் நடிகர் சுருதிஹாசன் தன்னுடைய வேதனையை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அழுதுவிட்டார். அவர் அதனை தெரியாத அளவுக்கு பார்த்துக் கொண்டாலும் கேமராவில் சிக்கியினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் செல்லத்தை இப்படி அழ்வச்சிட்டீங்களே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

    No comments