சமூக ஊடகங்களில் அவதூறு..... பெயர் தெரியாத கோழைகள் என நடிகை திரிஷா காட்டம்
அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'மௌனம் பேசியதே' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. தொடர்ந்து 'சாமி', 'கில்லி', 'ஆறு' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
'பொன்னியின் செல்வன்', 'லியோ' உள்ளிட்ட படங்களில் திரிஷாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. தற்போது அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'குட் பேட் அக்லி' படத்தில் திரிஷா நடித்திருக்கிறார். நேற்று வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் நபர்களை கண்டித்து நடிகை திரிஷா காட்டமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,
"சமூக ஊடகங்களில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களைப் பற்றிய முட்டாள்தனமான விஷயங்களைப் பதிவிடும் டாக்சிக் மக்களே, நீங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறீர்கள்? நன்றாக தூங்குகிறீர்கள்?. உண்மையில் பெயர் தெரியாத கோழைகள். உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்' என்று தெரிவித்திருக்கிறார்.
No comments