பல்லாவரத்தில் இந்திய கிறிஸ்தவ மிஷன் ஐ.சி.எம் ஜெபவீடு சார்பில் மாபெரும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரம் சக்தி நகர் பகுதியில் அமைந்துள்ள இந்தியா கிறிஸ்தவ மிஷன் என்கின்ற ஐ.சி.எம் ஜெப வீடு சார்பில் அப்போஸ்தலர் டி.எஸ்.ஜெயா தங்கராஜ் அவர்களின் தலைமையில் பாஸ்டர் டி.ஜெயராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பாஸ்டர் கிரேஸ் ஜெயராஜ் அவர்கள் முன்னிலையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் மாநகராட்சி 14வது வட்டச் கழக செயலாளர் ராஜ்குமார் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் தர்பூசணி உள்ளிட்ட பொருள்களை வழங்கினார் இதில் பல்லாவரம் வடக்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் முரசொலி ராஜன் மற்றும் ஐ.சி.எம் சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இறுதியில் வாகன ஓட்டிகளுக்கு நீர்மோர் தர்பூசணி உள்ளிட்ட பொதுமக்களுக்கு வழங்கிய வரவேற்பு ஏற்படுத்தினார்கள்.
No comments