• Breaking News

    ஆரணி பேரூர் கழக செயலாளர் முத்து ஏற்பாட்டில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் பங்கேற்பு


    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்  ஆரணி பேரூர் கழக திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் ஆரணி பேரூர் கழக செயலாளர் பி.முத்து ஏற்பாட்டில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

     அப்போது வருகிற 18.ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொன்னேரி தொகுதி ஆண்டார்குப்பம் பெருஞ்சேரி பகுதிக்கு வருகை தந்து ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தர உள்ளதால் அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும் எனவும், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று ஆளுநர் ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என ஆரணி பேரூர் கழக திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

     இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பகலவன்,மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்புவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ.குணசேகரன், வெங்கடாஜலபதி,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆரணி ரோஸ் பொன்னையன், மாவட்ட துணை செயலாளர் உமாமகேஸ்வரி, சிறுபான்மை நலன் அணி அமைப்பாளர் முகமதுஅலவி,மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயசித்ரா சிவராஜ், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன்,முன்னாள் ஆரணி பேரூர் கழக செயலாளர் கண்ணதாசன் பொருளாளர் கரிகாலன், நீலகண்டன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



    No comments