அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையன்..... இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த மதுரை போஸ்டர்

 


செங்கோட்டையனின் ஒவ்வொரு நகர்வுகளும் இப்போது அதிமுகவில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்ந்து மோதல்போக்கை கடைபிடித்து வருகிறார். இச்சூழலில், அவர் சமீபத்தில் டெல்லி சென்று பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. 

இதனையடுத்து செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.இந்த நிலையில், அதிமுக மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய தொகுதி செயலாளர் மிசா.ஜி.எஸ்.செந்தில் என்பவரின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‘அதிமுக கழகப் பொதுச் செயலாளர் செங்கோட்டையன் அவர்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

வைரலாகியுள்ள இந்த போஸ்டரில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் அப்போஸ்டரில் ராஜன் செல்லப்பா, வேலுமணி, தங்கமணி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

Post a Comment

0 Comments