அமெரிக்க பாடகியும் நடிகையுமான ஜெசிகா சிம்ப்சன், தனது நல்ல குரல்வளத்தின் ரகசியம் பாம்பு விந்து என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு பல எதிர்ப்புகள் வருகிறது. சமீபத்திய இன்ஸ்டாகிராம் ரீலில், சிம்ப்சன் தனது குரல் திறனை மேம்படுத்த சிரப் போன்ற சப்ளிமெண்ட் எடுத்து வருவதாகப் பகிர்ந்து கொண்டார்.
இந்த வெளிப்பாடு சமூக ஊடக பயனர்களிடையே பரவலான விமர்சனங்களையும் அவநம்பிக்கையையும் தூண்டியுள்ளது. தன்னுடைய குரல் வளத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக பாம்பு சீன மூலிகை பானத்தை உட்கொள்வதாக கூறியுள்ளார்.நல்ல குரல் வளம் வேண்டும் என்றால் நீங்கள் பாம்பு விந்தணுவை குடிக்க வேண்டும் என்று கூறியதோடு தன்னுடைய குரல் பயிற்சியாளர் குடிக்க சொன்னதாகவும் கூறி ஷாக் கொடுத்துள்ளார். வழக்கத்திற்கு மாறான பானம் தேநீரைப் போன்றதா என்று கேட்டபோது, அவர் அதை தேனுடன் ஒப்பிட்டார்.
0 Comments