கும்பாபிஷேகம் நடத்த தடை.... இந்துக்களின் சாபத்தில் வாழும் இந்து சமய அறநிலையத்துறை

 


தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதித்துள்ள ஐகோர்ட் மதுரை கிளை, புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் கமிஷனர் மற்றும் ஐ.ஐ.டி., நிபுணர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து உத்தரவிட்டு உள்ளது.

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு கடவுளை வணங்கினால், வடகாசியில் உள்ள கடவுளை வணங்கிய புண்ணிம் கிடைக்கும். இத்தகைய சிறப்புமிக்க இத்தலத்தில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 7 ம் தேதி காலை 9 மணிக்கு மேல் காசி விஸ்வநாத சுவாமி கோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தன பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்க இருந்தது.

இந்நிலையில் தென்காசி நம்பிராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்.7ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நிபுணர் குழு பரிந்துரைப்படி புனரமைப்பு பணி நடைபெறவில்லை. செயல் அலுவலர் தன்னிச்சையாக பணியை மேற்கொள்கிறார். கோயில் வளாகத்திலிருந்து அனுமதியின்றி தோண்டி அள்ளிய மணலை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். இதிலிருந்து கிடைக்க வேண்டிய வருமானத்தை கோயில் கணக்கில் வரவு வைக்கவில்லை. மணல் அள்ளியதால் கோயில் சுவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜகோபுரத்தில் மழைநீர் கசிவை சரி செய்யவில்லை. வண்ணம் மட்டுமே பூசப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வேலை முழுமையடையவில்லை. சுவாமிகள் புறப்பாடு வாகனங்களை சீரமைக்கவில்லை. தேர் திருப்பணி துவங்கவில்லை. அன்னதானக்கூடம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.புனரமைப்பு பணி முழுமையடையும்வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். புனரமைப்பு பணியை ஆய்வு செய்ய வழக்கறிஞர் கமிஷனரை நியமித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.

அரசு தரப்பு,'புனரமைப்பு பணி 100 சதவீதம் முடிந்து விட்டது,' என தெரிவித்தது.

இந்த வழக்கை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து இருந்தனர். இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ' கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. வழக்கறிஞர் கமிஷனர் மற்றும் ஐ.ஐ.டி.,நிபுணர் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என தெரிவித்து உள்ளனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நடைபெறாத பொழுது  குடமுழக்கு விழா நடத்த வேண்டிய அவசியம் என்ன. இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மிகவும் மோசமாகவும், இந்துக்களின் சாபங்களை வாங்கி கட்டி கொள்வதாகவும் பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments