பொன்னேரியில் நடைபெற்ற அரசு விழாவிற்கு வருகைதந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பல்வேறு அணிகள் சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு அரசுத்துறை தொடர்பான சுமார் 1166.32 கோடி ரூபாய் மதிப்பிலான நல திட்ட உதவிகளை 2.02,531 பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் 6760 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.
இதேபோன்று 7369 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்.நவீன தமிழகத்தின் சிற்பி கருணாநிதி எனவும்,திருவள்ளூரில் தொழில் வளாகத்தை ஏற்படுத்தியவர் கருணாநிதி எனவும்,4 ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பட்டியல் போட்டால் இன்னும் கூடுதலாக ஒரு மணி நேரம் தேவைப்படும் எனவும், அதனால் தலைப்பு செய்திகளாக சொல்லி விடுகிறேன் என தெரிவித்தார். திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையம், வடசென்னை அனல் மின் நிலையம், பூந்தமல்லியில் புதிய திரைப்பட நகரம், பொன்னேரி-கவரைப்பட்டை ரயில்வே மேம்பாலம் பாலம் உள்ளட்டவை தொடங்கப்பட்டுள்ளன எனவும்,₹54 கோடியில் சிறுவாபுரி முருகன் கோயில் திட்ட பணிகள் எனவும்,எல்லா திட்டங்களுக்கு திருவள்ளூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது எனவும்,10 ஆண்டு அதிமுக ஆட்சி இருண்ட காலம் எனவும், உட்கட்டமைப்ப நலிந்து போயிருந்தது எனவும் பேசிய முதல்வர்,நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் அதிகளவு, அதாவது 63,124 பயனாளிக்கு பட்டா வழங்குவது இதுவே முதல் முறை என தெரிவித்தார் டெல்லியில் உள்ளவர்களுக்கு எப்போதும் அடி பணிய மாட்டோம் எனவும், டெல்லிக்கு எப்பவுமே அவுட் ஆப் கன்டரோல் தான் தமிழ்நாடு எனவும், மத்திய அமைச்சர் ஆமிர்ஷாவிற்கு சவால் விடுத்த முதல்வர் மு. க. ஸ்டாலின். உங்கள் பரிவாரங்களோடு வாருங்கள் ஒருகை பார்ப்போம் எனவும், கொத்தடிமை துரோக கூட்டணியுடன் சேர்ந்து ஜெயிக்க நினைக்கிறீர்கள், அது ஒருபோதும் நடக்காது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை அது பலிக்காது, தமிழ்நாடு போராடும்,தமிழ்நாடு வெல்லும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், பொன்னேரி நகராட்சி சேர்மன் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் முகமது அலவி, நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சஞ்சய் காந்தி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜெயசித்ரா சிவராஜ், பொன்னேரி நகர இளைஞரணி அமைப்பாளர் மா. தீபன், உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொன்னேரி அம்பேத்கர் சிலையில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடை பயணத்தில் தகவல் தொழில் நுட்ப அணி விவசாய அணி வழக்கறிஞர் அணி போக்குவரத்து தொழிலாளர் அணி பல்வேறு அணிகளை சேர்ந்த ஈடுபட்டு வரவேற்றனர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
No comments