பூந்தமல்லி: ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் மாநில அளவிலான பி.எஸ்.ராவ் நினைவு விளையாட்டு விழா நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகில் உள்ள கோலப்பஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் மாநில அளவிலான பி.எஸ்.ராவ் நினைவு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவில் தமிழ்நாடு நிறுவன மேலாளர் ஹரிபாபு அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சவிதா இன்ஜினியரிங் கல்லூரியின் விளையாட்டு மும்முனைப் பேராசிரியர் வால்வீமா ராஜா மற்றும் காவல் துணை ஆய்வாளர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தனர்.இதில் சென்னை , ஓசூர், நாமக்கல், கோயம்புத்தூர் மண்டலங்களை சேர்ந்த சைதன்யா பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
எல்லா மண்டலங்களின் முதல்வர்களும், விளையாட்டுத்துறை வள ஆய்வாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி, விழா வெற்றிகரமாக நடைபெற உதவினர்.
பல போட்டிகள், நிகழ்ச்சிகள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
No comments