• Breaking News

    இலவு காத்த கிளிபோல அதிமுக..... விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்

     


    தமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வாழ்த்து தெரிவித்தார். விசிக எம்எல்ஏக்கள் சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ஷா நவாஸ் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

    பின்னர், திருமாவளவன் கூறியதாவது: ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் தகுந்த பாடம் புகட்டியிருக்கிறது. அது மட்டுமின்றி, பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளும் அரசுகளுக்கு ஆளுநர்கள் நெருக்கடி கொடுக்க முடியாது என்பதை உறுதிப்படுத்தியும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    பாஜகவின் தயவு வேண்டும் என்பதற்காக தமிழக மக்களின் ஆதரவை இழக்கும் நிலைப்பாடுகளை அதிமுக தொடர்ந்து எடுத்து வருகிறது. இதுபோன்ற நிலைப்பாடுகள் மூலம் தமிழக மக்களிடம் இருந்து அதிமுக விலகி செல்கிறது. அவர்களுக்கான சரிவை நோக்கி அவர்களே சென்று கொண்டிருக்கின்றனர்.திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் எப்போது வெளியே வரும், வெளியே வரும் என இலவு காத்த கிளிபோல அதிமுக காத்திருந்து அது நடக்காததால், விரக்தியில் திமுக கூட்டணி கட்சிகள் பற்றி எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

    No comments