கும்மிடிப்பூண்டி: இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட், போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பகுதியில் ஆரம்பாக்கம எளாவூர் ரெட்டம் பேடு சுற்று வட்டாரம் உள்ள கிராமங்களில் சுமார்.10  ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பயணித்து கொண்டிருக்கிறார்கள்.தற்பொழுது மேற்கண்ட அனைத்து பகுதிகளிலும் குடியிருப்பு வாசிகள் வீடுகள் தோறும் இரண்டு மூன்று இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். 

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவு பேரில் கும்மிடிப்பூண்டியில் ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

இந்த நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் வரவேற்றார். சப் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், மாரிமுத்து, சந்திரசேகர், மோகன்,ஆறுமுகம், தனிப்பிரிவு போலீசார்கள் சுரேஷ், ராமதாஸ், சுரேஷ், உளவுத்துறை போலீசார் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் இருந்து கும்மிடிப்பூண்டி பஜார் வரை   கே. எல். கே. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,டி. ஜெ. எஸ். கல்லூரி மாணவர்கள், வேலம்மாள் கல்லூரி மாணவர்கள், ஜெயராம் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹெல்மெட் மற்றும் போதை பொருள் விழிப்புணர் குறித்து பதாகை ஏந்தியவாறு வந்தனர். பின்னர் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டுகளிடம் ஹெல்மெட் குறித்தும் போதைப்பொருள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதோடு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


 இது குறித்து டிஎஸ்பி ஜெயஸ்ரீ பேசுகையில் ஒவ்வொருவரும் தன் குடும்பத்தை எப்படி பாதுகாக்கிறார்களோ அதே போன்று சாலையில் இரு சக்கரம் ஓட்டும்பொழுது ஒவ்வொருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் அப்பொழுதுதான் உங்கள் குடும்பத்தை நீங்கள் காக்க முடியும் என்றும் அதேபோல் ஒவ்வொரு வீட்டில் உள்ள சிறுவர்களிடம் இருசக்கர வாகனத்தை பெற்றோர்கள் கொடுக்க வேண்டாம் எனவும் மீதி கொடுக்கப்பட்டால் பெற்றோர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்படும் என்றும் போதைப் பொருள் முற்றிலுமாக ஒழிக்க அனைவரும் உறுதி மொழி ஏற்று பேசினார். இதில் ஏராளமான பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments