• Breaking News

    கும்மிடிப்பூண்டி: சின்னஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி சின்னஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்த விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்த் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் குல்ஜார் ஜஹான் ஆண்டறிக்கை வாசித்தார்.

    இந்த நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக  கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பங்கேற்று சிறப்புரை ஆற்றும் போது கும்மிடிப்பூண்டியில் நூற்றாண்டு கண்ட பள்ளிகளில் ஒன்றாக சின்ன ஓபுளாபுரம் நடுநிலைப்பள்ளி உள்ள நிலையில் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் காவல்துறையில் அதிகாரிகளாக உள்ளதாகவும் கூறியவர் இந்த நூற்றாண்டு விழாவில் 75 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்த மாணவர்களும் பங்கேற்றது சிறப்புக்குரியது என்றார்.

    தொடர்ந்து பேசியவர் தமிழக அரசு கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் இதனை உணர்ந்து மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், கல்வியை ஒருவரை வாழ்க்கையில் உயர்த்தும் என்பதை பெற்றோர்களும் உணர்ந்து கொண்டு மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.தொடர்ந்து விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் முனிராஜ சேகர், சுதா சிவகாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஏழுமலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் .

    தொடர்ந்து இந்த விழாவில் கும்மிடிப்பூண்டி டி.ஜெ. கோவிந்தராஜன் மற்றும் தமிழக தமிழறிஞர் பேரவையின் மாநில பொதுசெயலாளரும் பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வி ஆலோசகரமான டாக்டர் சிவ.செல்வகுமார் பங்கேற்று கல்வியிலும் பல்வேறு போட்டிகளிலும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்கள்.தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவிற்கான நிகழ்வுகளை இடலை ஆசிரியர்கள் நித்யா, பன்னீர்செல்வி தொகுத்து வழங்கினர் விழா முடிவில் பட்டதாரி ஆசிரியர் ஜானகிராமன் நன்றி கூறினார். 


    சின்ன ஓபுளாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பள்ளி மேலாண்மை குழு விழா குழு சார்பில் சார்பில் நூற்றாண்டு விழா நாணயம் வழங்கப்பட்டது.

    No comments