• Breaking News

    மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டம்; அமைச்சர், எம்எல்ஏக்கள், பக்தர்கள் பங்கேற்பு

     


    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் கோயிலில் தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

    இந்தக் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இவ்விழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.நாள்தோறும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளும் ஏகாம்பரநாதர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


    இந்நிலையில் விழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது. கோயில் நிர்வாகம் மற்றும் மீஞ்சூர் கிராம மக்கள் ஏற்பாடு செய்த விழாவில் காமாட்சியம்மனுடன் ஏகாம்பரநாதர் வீற்றிருந்த தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 

    சிறுபான்மை துறை அமைச்சர் சாமு நாசர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக சிறுணியம் பலராமன்

    தேர் வடம்  பிடித்த பிடித்து இழுத்த பக்தர்கள் ஓம் சிவாய நம சிவாய விண்ணை முட்டியவாறு  கோஷங்களை தேங்காய் உடைத்தும் கற்பூரம் ஏற்றியும் சாமி தரிசனம் செய்தனர் இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் மீஞ்சூர் நகர செயலாளர்  தமிழ் உதயன் பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணி துணைத்தலைவர் அலெக்ஸாண்டர் டாக்டர் விஜயராகவன். தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் தேர்த்திருவிழா யோட்டி  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது .



    No comments