அரசுக்கு அவப்பெயர்..... அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. அனைத்து அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தநிலையில், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படக் கூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியதாகவும் இனியும் தொடர்ந்தால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் துறை ரீதியான பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரின் பேச்சு சர்ச்சையான நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு அறிவுறுத்தியாக கூறப்படுகிறது.
No comments