மயிலாடுதுறை: ஏவிசி கல்லூரியில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா
மயிலாடுதுறை அருகே உள்ள ஏவிசி கல்லூரியில் பேங்கிற்கு புதியதாக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே. வெங்கடராமன் தலைமைவைத்து அடிக்கல் நாட்டினார்.
கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன், பொறியியல் கல்லூரி இயக்குனர் எம். செந்தில் முருகன், முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் ஜி. ரவி செல்வம், கணிப்பொறியியல் துறை தலைவர் எம்.முத்தமிழ் அரசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இன்ஜினியர் ரமேஷ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
No comments