கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மாணவிகள் நெற்பயிரில் விதை நேர்த்தி குறித்து விளக்கம் கொடுத்து அசத்தல்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகளான அபிநயா, கோபிகா, ஜனனி, ஜெப ஜாண்சி, ஜிஷா மேரி, ஜோஷ்னா, மகாலட்சுமி, சௌம்யா ஆகியோர் கீழ்வேளூர் ஊராட்சி அத்திப்புலியூர் கிராம விவசாயிகளுக்கு சூடோமோனஸ் ஃப்ளோரசன்ஸ் என்ற பாக்டீரியாவை பயன்படுத்தி நெற்பயிர்களில் விதை நேர்த்தி செய்யும் முறையையும் இதனை பயன்படுத்தி பயிர்களில் வரும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகளையும் செயல் திறன் விளக்கமாக செய்து காண்பித்தனர்.
அதனை தொடர்ந்து மாணவிகள் அதன் பயன்கள் குறித்தும் அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No comments