நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் வட்டார அளவிலான கூட்டமைப்பு பயிற்சி முதற்கட்டம் மற்றும் இரண்டாம்கட்டம் பயிற்சி நிறைவு பெற்றது.தொடர்ந்து மூன்றாம் கட்ட பயிற்சி நான்கு நாள் 01.04.2025 முதல் 06.04.25 வரை கீழையூர் ஊராட்சியில் கிராம சேவை மையம் அலுவலகத்தில் நடைப்பெறுகிறது.
இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மதுமிதா வரவேற்று பேசினார் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் சித்ரா அவர்கள் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி தொடங்கி வைத்தார் உதவி திட்ட அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் பயிற்சிகள் ஸ்ரீரங்கபாணி பயிற்சி அளித்தார்.
இதில் செயல்முறை விளக்கம், சுயஉதவிக் குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துதல், தனி நபர் தேவை, குடும்ப தேவை (ம) கிராமத்தின் தேவை கொண்டு காரணிகள், 6 பரிமாணங்கள் கொண்டுள்ளது. கல்வி , சுகாதாரம், வாழ்வாதாரம், திறன் வளர்ப்பு, உட்கட்டமைப்பு, சமூக மேம்பாடு , போன்ற பரிமாணங்கள் கொண்டு 2025 - 2026 முன்னுரிமைப்படுத்தப்பட்ட காரணிகள் இலக்கு மற்றும் பொறுப்புகள் கொண்டு இந்த ஆண்டு உறுப்பினர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் பற்றி BLF, PLF EC உறுப்பினர்களுக்கு மற்றும் சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் அல்லது சமுதாய வள பயிற்றுநர்களுக்கு பயிற்சி நான்கு நாட்கள் வழங்கப்படுகிறது. இதில் இரண்டு நாட்கள் இரண்டு ஊராட்சியில் களபயணம் மேற்கொள்ளப்படும்.முடிவில் சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர் சரஸ்வதி நன்றி கூறினார்.
மக்கள் நேரம் எடிட்டர் நாகை மாவட்ட நிருபர் ஜி. சக்கரவர்த்தி
0 Comments