தாம்பரம்: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு விசிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அம்பேத்கரின் 134 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விசிக சார்பில் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சியின் தாம்பரம் மாநகர செயலாளர் எபிநேசர் சாமுவேல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விசிகவினர் அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மாரியதை செலுத்தினர்.
அதன்பின்னர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு விசிகவினர் மலர்தூவி மரியாதை செய்தனர். இதனையடுத்து அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவநாள் உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலலர் ராமனுஜம், சமூக ஊடக பிரிவு மாநில துணை செயலாளர் கதிரவன், தொகுதி செயலாளர் ரஞ்சன், தொகுதி பொறுப்பாளர் செல் சேகர் உள்ளிட்ட விசிகவினர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments