பழவேற்காடு தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதனை முன்னிட்டு பழவேற்காடு தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டு கூட்டமைப்பு சார்பில் காவல்துறை மற்றும் அரசுத்துறையுடன் இணைந்து எவ்வாறு பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவது என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன் ஒருங்கிணைப்பாளர் ஹாஜா மொய்தீன்,துணை ஒருங்கிணைப்பாளர் துரை மகேந்திரன்,காவல்துறை அதிகாரிகள் சக்திவேல்,மோகன்,திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கத் தலைவர் எத்திராஜ்,உறவு அறக்கட்டளை மஞ்சு,அட்சுவா அறக்கட்டளை லல்லி பாலாஜி, இயற்கை அறன் சமூக நல அறக்கட்டளை இயக்குனர் ஏகாட்சரம்,கிரிணியோ ஐ.எஃப்.டிபி ஸ்ரீதேவி,பிற தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் அப்துல்கைம்,ஜெகன், ஜனகராஜ்,ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
No comments