• Breaking News

    மேடையில் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு அமைச்சர் ரகுபதி ஆதரவு.?

     


    அண்மையில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவத்தை குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது பேச்சுக்கு வலுவான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    இதையடுத்து, தி.மு.க.,வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில், பொன்முடியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    அவர் கூறியதாவது; பேச்சுவாக்கில் கேசுவலாக ஏதாவது ஒன்றை சொல்வது இயற்கை. அந்த மாதிரிதான். யாருமே வேண்டும் என்று பேசுவது கிடையாது. தி.மு.க., கொள்கைகளை வலியுறுத்தி தான் நாங்கள் பேசுகிறோமே தவிர, எங்கையாவது கேசுவலாக பேசிட்டு இருக்கும் போது ஏதாச்சும் ஸ்லிப்பாகி வார்த்தைகள் வரும். அப்படித்தான். பொன்முடி விவகாரத்தில் முதல்வர் தான் முடிவெடுப்பார், இவ்வாறு அவர் கூறினார்.

    No comments