இந்தியா மீதான வரியை குறைத்தது அமெரிக்கா

 


அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப அமெரிக்க அரசு விதிக்கும் பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப்போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும் என்றும் அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதன்படி கடந்த புதன்கிழமை பல்வேறு நாடுகளுக்கு எதிரான பரஸ்பர வரிகளை அறிவிக்கும்போது, இந்தியா, சீனா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது அமெரிக்க அரசின் பரஸ்பர வரிகள் தொடர்பான விளக்கப்படத்தை காட்டினார்.

அதில், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 52% வரிகளை வசூலித்ததாகவும், தற்போது இந்தியாவிடம் இருந்து 26% பரஸ்பர வரியை அமெரிக்கா வசூலிக்கும் என்றும், இது ஏப்ரல் 9-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், முன்னதாக வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ கோப்புகளில் இந்தியாவிற்கு 27% வரி விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட அறிக்கைகளின்படி, இந்தியா மீதான வரியை 27%-ல் இருந்து 26% ஆக அமெரிக்கா குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சதவீத வரி குறைப்பு என்பது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments