கம்பம்: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்ட சமூக ஆர்வலர்கள்
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் உள்ள வளாகத்தில் அன்பு அறம் செய் மற்றும் வானவில் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும், கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் கிராம தங்கள் திட்டத்தின் மூலமும் உலக சுகாதாரத்தை முன்னிட்டு அரசு தலைமை மருத்துவர் பானுமதி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
மேலும் சுகாதாரத்தை பொதுமக்கள் உணரும் விதமாக அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்திற்குள் யாரும் நெகிழிப்பைகள் பயன்படுத்தக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாக வருகை தந்த அனைத்து பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மஞ்சப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
No comments