• Breaking News

    மகாவீர் ஜெயந்தி..... இறைச்சிக்கூடங்களை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு

     


    சமண மதத்தின் முக்கிய நிகழ்வுகளில் மகாவீர் ஜெயந்தியும் ஒன்று. இதனிடையே, இந்த ஆண்டு மகாவீர் ஜெயந்தி வரும் வியாழக்கிழமை (10.4.2025) கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியையொட்டி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக்கூடங்களையும் மூட பெருநகர சென்னை மாநகராட்சி உத்தவிட்டுள்ளது.

    இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

    பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வருகிற 10.04.2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. ஆகவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments