• Breaking News

    முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது...... வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ்.....


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் பொன்னேரி நகர விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தமிழ்நாடு அளவிலான மாபெரும் கிளப்புகளுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி மூன்று நாட்களாக நடைபெற்றது.


     இதில் சூப்பர் சீனியர், சீனியர், ஜூனியர், சப் ஜூனியர், ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது இதில் திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர்.

    பொன்னேரி நகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரேம்சேகர் ஏற்பாட்டில்  நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் கலந்துகொண்டு குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கினார்.

     நிகழ்ச்சியில் பொன்னேரி நகர கழக செயலாளர் ரவிக்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் தீபன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜேஷ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    No comments