பாவூர்சத்திரம் எஸ்எஸ். மழலையர் பள்ளியில் பட்டளிப்பு விழா நடைபெற்றது.பாவூர்சத்திரம் எஸ்.எஸ். மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் சந்தானம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் முப்புடாதி தேவி வரவேற்று பேசினார். ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கல்லூரி உதவி பேராசிரியை பிரபாவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, யு.கே.ஜி. குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். மழலை குழந்தைகள் பட்டமளிப்பு விழா ஆடை அணிந்து வந்து பட்டங்களை பெற்றுக்கொண்டனர். ஆசிரியர் அய்யாத்துரை கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு பதக்கங்களை வழங்கினார்.
மாணவ, மாணவிகளின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. விழாவில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை யோகேஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியைகள் ஜெயலட்சுமி, சந்தியா, பொன்மலர், மாரிசெல்வி, மகாலட்சுமி, தேவி, சுமித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.
0 Comments