• Breaking News

    நாகை அருகே அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ விழா நடைபெற்றது

     


    தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான சமத்துவ நாள் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் 1252 பயனாளிகளுக்கு 31 கோடியே 20 இலட்சத்து 36 ஆயிரத்து 824 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ்,   தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன்;  கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர்  வழங்கினார்கள். 

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னை, கலைவாணர் அரங்கில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 ஆவது பிறந்தநாளான சமத்துவ நாள் விழாவை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் புதிய விடுதி, பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், கற்றல் கற்பித்தல் அறைகள், 1000 பழங்குடியினர் வீடுகள், ஆகியவற்றை திறந்து வைத்து, 49,542 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை சார்பில்  தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமவிதைகளையும்,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்து என மொத்தம் 1252 பயனாளிகளுக்கு 31 கோடியே 20 இலட்சத்து 36 ஆயிரத்து 824 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர்  கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினர்.



     அதனைத்தொடர்ந்து, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு “சமத்துவநாள்” உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ்,  தலைமையில்; அனைவரும் எடுத்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில்   நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அரங்கநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரேணுகாதேவி,  மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



     கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த. கண்ணன்

    No comments