• Breaking News

    திருக்குவளை அருகே நூற்றாண்டு கடந்த வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது


    நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலத்தில் நூற்றாண்டு கடந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியின் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருள்களை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர்கள் வே. சிவகுமார் மற்றும் இரா. அன்பழகன் ஆகியோர்  வழங்கினார்கள்.


    தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கணவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்படப் பாடல்கள், கிராமிய பாடல்கள் என  பள்ளி மாணவ மாணவிகள்  தங்களது நடன திறமையை வெளிப்படுத்தினர். இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்தினர்.

    இப்பள்ளியின் கலையரங்கில் ஆண்டு விழா பள்ளி மேலாண்மை குழு தலைவர் ம.மீனாட்சி தலைமையில் நடைபெற்றது. கொடியாலத்தூர் முன்னாள் ஊராட்சி தலைவர் ரேவதி ஐயப்பன்  மற்றும் ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சீ. முரளி வரவேற்றார்.

    இந்நிகழ்வில் கிள்ளுக்குடி பள்ளி  தலைமையாசிரியர் பாலகண்ணன்,பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவர் கண்ணதாசன், பள்ளி மேலாண்மை குழு முன்னாள் தலைவர் கார்த்திகா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பிரகாஷ், பள்ளி ஆசிரியர்கள் சு. சேவுராஜன்,ஆ. புஷ்பா, வீ. கணேசன், தன்னார்வ ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிறைவாக பள்ளி ஆசிரியர் தெ.ஐயப்பன் நன்றி கூறினார்.

     கீழ்வேளூர்  தாலுகா நிருபர் த. கண்ணன்

    No comments