கீழ்வேளூர் அருகே அருள்மிகு சத்யாயதாஷி உடனாய அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கீழ விடங்களூர் சத்யாயதாஷி உடனுறை அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா விநாயகர் பூஜையுடன் கடந்த வியாழக்கிழமை துவங்கியது. இரண்டு கால யாக பூஜை நிறைவு பெற்று வெள்ளிக்கிழமை கடம் புறப்பாடு நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க கடத்தில் அடங்கிய புனித நீர் கொண்டு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதிபாரதம் காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பணிகளை பிரேமா சூரிய நாராயணன்,சூரிய நாராயண சர்மா, வெங்கடேசன் என்கின்ற கோபி ஆகியோர் செய்திருந்தனர்.
கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த.கண்ணன்
No comments