• Breaking News

    திருப்பத்தூர்: தனியார் பள்ளி காவலாளியை ஓட ஓட விரட்டி படுகொலை

     


    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே முஸ்லீம்பூர் என்ற பகுதி உள்ளது. இங்கு இர்பான் என்ற 40 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஆஜிரியா என்ற மனைவியும், இரு மகன்கள் மற்றும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் இர்பான் ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

     இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை சைக்கிளில் இர்பான் பள்ளிக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். இவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென அவர்கள் இர்பானை தள்ளிவிட்டனர். அவர்கள் கத்தியால் அவரை குத்திய நிலையில் அவர் வலி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடினார்.

    ஆனால் அவர்கள் விடாமல் அவரை துரத்தி துரத்தி படுகொலை செய்தனர். அவருடைய சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில் உடனடியாக கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இர்பான் சம்பவ இடத்தில் உயிரிழந்துவிட்டார்.

     இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரின் சடலத்தை விட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணத்தை தொடர்ந்து அவர் வேலை பார்க்கும் தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments