எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியார் அணை குறித்து தவறாகச் சித்தரிக்கும் காட்சிகளை நீக்கக்கோரி பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் போராட்டம் அறிவித்திருந்தனர்.
எல்2: எம்புரான் 2025 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி திரைப்படமாகும். பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், வெளியான இத்திரைப்படத்தை, ஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன் தயாரித்துள்ளனர். இது 2019-ஆம் ஆண்டு வெளிவந்த லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.
இப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன், அபிமன்யு சிங், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், ஆண்ட்ரியா திவதர், ஜெரோம் பிளின், இந்திரஜித் சுகுமாரன், எரிக் எபோனே, சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடித்துள்ளனர். எம்பிரான் திரைப்படத்தில் முல்லைப்பெரிாயறு அணை குறித்து தவறாக சித்தரித்திருப்பதாகவும், பிருத்விராஜ் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வருவதாகவும் தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு உடையும் இதனால் பயங்கர சேதம் ஏற்படும், போன்ற காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதாகவும் இதனை உடனடியாக நீக்க வேண்டும் தொடர்ந்து பிரித்திவிராஜ் முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் கூறி இன்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கோகுலம் சிட்பண்ட்ஸ் உரிமையாளர் கோபாலனை கண்டித்தும் அவர்களது நிறுவனமான கம்பம் காந்தி சிலை அருகே உள்ள கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தின் கிளையை முற்றுகையிடுவதற்காக பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு விவசாய சங்கத்தை சார்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக காந்தி சிலை அருகே உள்ள கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தின் கிளையை முற்றுகையிடுவதற்காக வந்தனர்.
இதற்கிடையே வரும் வழியில் இருந்த எம்பிரான் திரைப்படம் திரையிடப்பட்டிருந்த திரையரங்கத்தை நோக்கி முற்றுகிடுவதற்காக சில விவசாயிகள் உள்ளே நுழைந்தனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியே அனுப்பினார். பின்னர் தொடர்ந்து ஊர்வலமாக வந்தவர்களை காந்தி சிலை பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது அதனைப் பற்றி வீண் வதந்தியை கிளப்ப கூடாது பிரித்திவிராஜ் மற்றும் மோகன்லால் மட தயாரிப்பாளர் கோகுலம் சிட் பண்டு உரிமையாளர் கோபாலன் உள்ளிட்டோரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.உடனடியாக தமிழக அரசு தமிழகத்தில் எம்புரான் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் முல்லைப் பெரியாறு குறித்து அவதூறு பரப்பும் விதமாக வெளியிடப்பட்ட எம்புரான் திரைப்படம் மற்றும் அதில் நடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் வகையில் பாசன விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்களும் மற்றும் பல்வேறு விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்பர் பாலசிங்கம் கூறுகையில் உலகமெங்கும் வெளியாக இருக்கக்கூடிய எம்புரான் திரைப்படத்தில் முல்லைப் பெரியாருக்கு எதிராக நிறைய விஷயங்கள் பேசப்பட்டிருக்கிறது. ஃபேன் இந்தியா மூவியாக எடுக்கப்பட்ட திரைப்படம் இறுதியாக முல்லை பெரியாரில் வந்து நிற்கிறது.அணை உடையாது என்று 2014 உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பிறகும் அணை உடையும் என்று படத்தின் கதாநாயகி ஒரு வசனத்தை பேசுகிறார். இதுபோன்று தமிழில் ஒரு படம் எடுத்து அதனை கேரளாவில் திரையிட முடியுமா என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் சிட் பண்ட்ஸ் உரிமையாளர் கோபாலன் 442 சீட்டு நிறுவனங்களை தமிழகத்தில் நடத்தி வருகிறார்.ஆண்டிற்கு 8000 கோடி வருமானம் ஈட்டக்கூடிய இந்த கோபாலன் எதற்காக தமிழகத்திற்கு எதிராக திரைப்படத்தை எடுக்க வேண்டும் தமிழ்நாட்டிலேயே அதனை விநியோகம் செய்து இருக்கிறார் இதனை கேட்பதற்கு ஆள் இல்லை.முல்லைப் பெரியாறு அணை நம்பி இருக்கக்கூடிய பகுதிகளில் இத்தனை திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. எம்புரான் திரைப்படம் சர்வதேச அரசியலை பேசினாலும் இறுதியில் எங்களது இனத்தின் மீது கை வைக்கிறது அதனால் அந்த கோகுலம் சிற்பம் கோபாலன் அவரை தமிழக முழுவதும் இருக்கக்கூடிய 442 அவரது கிளைகளிலும் பல்வேறு விவசாய சங்கம் அமைப்பினர் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர் தொடர்ந்து அங்கு சீட்டு போட்டிருக்கும் தமிழக மக்கள் அனைவரும் அதனை திரும்ப பெற வேண்டும் கேட்டுக்கொண்டனர்.முழுக்க முழுக்க தமிழர்களின் உழைப்பின் சீட்டு கம்பெனி நடத்திக் கொண்டு தமிழர்களுக்கு எதிராக படத்தினை தயாரித்தவர் இந்த கோபாலன்.
எம்பிரான் திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் படத்தில் இருக்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணைத்து எதிராக இருக்கக்கூடிய காட்சிகள் வசனங்களை நீக்க வேண்டும் மோகன்லால் எப்படி பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தாரோ அது போன்று ஐந்து மாவட்டத்தில் இருக்கக்கூடிய பெரியார் வைகை பாசன விவசாயிகளிடம் மோகன்லால் மற்றும் படக்குழு மன்னிப்பு கேட்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
0 Comments