• Breaking News

    ஈத்மிலன் நிகழ்ச்சி தேரழந்தூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் நடைபெற்றது..... மூன்று மதத்தைச் சார்ந்த குருமார்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு......


    ஈத் பண்டிகையின் மகிழ்ச்சியையும் இனிமையையும் சக குடிமக்களுடன் பகிர்ந்துகொள்வது ரமலான் மாதத்தில் ஒரு மாத நோன்புக்குப் பிறகு, ஈதுல் மிலன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் ஒளி என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரிழந்தூர்  ஜமாத்தார்கள் சார்பில்  சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு (ஈத் மிலன்) நிகழ்ச்சி நடைபெற்றது.தனியார் திருமண அரங்கில்  நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊர் நாட்டாண்மை & பஞ்சாயத்தார்கள் தலைமையில்  ஜமாஅத்தார்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலை வகித்தனர்.விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஷாஹுல் ஹமீது நிஜாமி ரஹ்மானீ துவக்க உரையாற்றினார் சிறப்பு அழைப்பாளர்கள்  ரைஸ் IAS அகாடமி நிறுவனர் வழக்கறிஞர் இராஜாராமன்.நீடூர் ஜே.எம்‌.ஹெச் அரபிக்கல்லூரி முதல்வர்

    மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஃபாஜில் பாகவி, மற்றும் கும்பகோணம் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள்,ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம்.மறைவட்ட அதிபர் & பங்குத் தந்தை.புனித சவேரியார் ஆலயம்,மயிலாடுதுறை தார்சிஸ்ராஜ்,ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்வில் மதங்களை கடந்து மனித நேயம் காக்க அனைத்து சமூக மக்களும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு பரஸ்பர தங்களது நட்பை பகிர்ந்துக் கொண்டனர்.

    No comments