கோவை: வழிப்பறி வழக்கில் கைதான இரு ரவுடிகளுக்கு கால் முறிவு
கோவை ரத்தின புரி தில்லை நகரை சேர்ந்தவர் கவுதம் (29). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் இரவில் பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கவுதமின் செல்போனை பறித்துவிட்டு தப்பினர். புகாரின் பேரில், ரத்தினபுரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், செல்போனை பறித்துச் சென்றவர்கள் ரத்தினபுரி தயிர் இட்டேரி பகுதியை சேர்ந்த அம்புரோஸ் (28), ரத்தின புரி சுப்பையா லே-அவுட் பகுதியை சேர்ந்த லாரன்ஸ்(27) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கைதான அம்புரோஸ் மீது 9 வழக்குகளும், லாரன்ஸ் மீது 10 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ரவுடிகள் 2 பேரும் கடந்த வாரம்தான் வெளியே வந்துள்ளனர். வெளியே வந்த உடனேயே தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.இருவரும் கவுதமிடம் செல்போனை பறித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது, ரத்தினபுரி மேம்பால தடுப்புச் சுவர் மீது மோதி கீழே விழுந்தனர். இதில் 2 பேரின் கால்களும் முறிந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் இப்ராகிம் பாதுஷா மற்றும் போலீஸார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்” என்றனர்.
No comments