ஆண்களே..! குடும்பத்தோடு நாசமா போங்க.... சாபம் விட்ட சின்மயி

 


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக பிரபலமான நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ தான் என்று கூறி சமூக வலைதளத்தில் ஒரு ஆபாச வீடியோ வைரலாகி வந்தது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இதனையடுத்து நானும் பெண்தான். எனக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. 

எனக்கு நெருக்கமானவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. அனைத்தையும் இப்படி காட்டுத்தீ போல பரப்பாதீர்கள். வீடியோ பார்க்க வேண்டும் என்றால் உங்களுடைய அம்மா, சகோதரி, காதலி வீடியோவை பாருங்கள். ஏனென்றால் அவர்களும் பெண்கள்தான். அவர்களுக்கும் என்னை போல உடல் இருக்கிறது. கமெண்டில் என்னதான் எல்லோரும் குறை சொல்லுகிறார்கள். அந்த வீடியோவை லீக் செய்தவரை எதுவும் கேள்வி கேட்கவில்லை என்றும் இது AI மூலமாக வடிவமைக்கப்பட்டது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து பாடகி சின்மயி கடுமையாக பதிவிட்டுள்ளார். அதில், வீடியோவை வெளியிட்டது ஆண்கள்தான். அதை பகிர்ந்ததும் பரப்பியதும் அவர்கள் தான். அதே ஆண்கள் தான் லஞ்சம் கொடுப்பது தவறு, லஞ்சம் வாங்குவது குற்றம் என்று பேசுகிறார்கள். ஆனால் லஞ்சம் இல்லாமல் எதுவுமே நடக்காது என்பதையும் பெண்கள் சமரசம் செய்ய மறுப்பதால் வேலைகளை இழக்க நேரிடுகிறது என்பதையும் அவர்களை ஒப்புக்கொள்கிறார்கள் . அந்த வீடியோ வெளியிட்ட மனிதரைப் பற்றி யாரும் பேசுவதே கிடையாது.

தவறு செய்த ஆண்கள் தொடர்ந்து மக்களால் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் ஒரு பெண் சமூகம் தன்னை தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அந்த வீடியோவை வெளியிட்ட ஆண்கள் யார்? அதை பரப்பியவர்கள் யார்? ஒரு நபர் படம் எடுத்தாலும் அதை பகிர்வதற்கு பலரும் தயாராக இருக்கிறார்களா? இதுபோன்ற எல்லா நரக அரக்கர்களும் அழிந்து போக வேண்டும் .நாசமாய் போங்கள் உங்களை இப்படி வளர்த்தவர்களோடு சேர்ந்து முழுதாக அழிந்து போங்கள்” என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments