ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தின் திறப்பு விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், பாம்பன் புதிய ரெயில்வே மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி 6-ம் தேதி திறக்க இருப்பதை ஒட்டி அங்குள்ள தூக்கு மேம்பாலம் வண்ண ஒளிகளில் ஜொலிப்பதை காணலாம். இரவில் கடலில் இருந்து பார்க்கும்போது புதிய பாம்பன் பாலம் வண்ணமயமாக பல்வேறு கலர்களில் ஜொலிப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
0 Comments