டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறப்பு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது
ஜனதா தளம் ஐக்கியம் கட்சியின் சார்பாக சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாள் விழா மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா மாநில செயலாளர் சுதாகர் ஏற்பாட்டில் ஈஞ்சம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாநில துணை தலைவர் லயன் டாக்டர் ஏ டி விஸ்வநாத் தலைமையில் தமிழ்நாடு ஜனதா தளம் ஐக்கியம் கட்சியின் தலைமை பொது செயலாளர் லட்சுமணன் அம்பேத்கரின் படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொது மக்களுக்கு மோர் தர்பூசணி மற்றும் காலை சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டது . இந்நிகழ்வில் பொது செயலாளர்கள் மாநில செயலாளர்கள் மாநில அனைத்து அணியினர் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர் பொது செயலாளர் இ சி ஆர் ஶ்ரீகாந்த் முன்னிலை வகித்தார். கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பி்தனர்.
No comments