அறிமுக போட்டியிலேயே புதிய வரலாற்று சாதனை படைத்த மும்பை அணியின் இளம் வீரர்

 


மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 16 ஓவரில் 116 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

 பின்னர் களமிறங்கிய மும்பை 12.5 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் தீபக் சாஹர் 2 விக்கெட்டும், போல்ட், சாண்ட்னர், விக்னேஷ் புத்தூர், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மேலும், தனது முதல் போட்டியில் விளையாடிய அஸ்வனி குமார் 3 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்று சாதனை படைத்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி என்ற ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர்தான் அஸ்வினி குமார். எளிய குடும்பத்தில் பிறந்த இவர் கிரிக்கெட் மீதான ஆர்வத்தின் காரணமாக சிறுவயதில் இருந்தே கடினமாக முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

 சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து கிரிக்கெட்டில் முன்னணிக்கு வந்த இவருடைய விடாமுயற்சி அவருக்கு ஐபிஎல் மூலமாக விஸ்வரூப வெற்றி கொடுத்துள்ளது.  நேற்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது பெற்ற இவர் நான் மொஹாலி அருகே ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வருபவன். இந்த நிலைக்கு வருவதற்கு மிகுந்த கடின உழைப்பும் கடவுளின் அருளும் துணை இருக்கிறது” என்று  உணர்ச்சி பொங்க பேசினார்.

Post a Comment

0 Comments