ஆலங்குளத்தில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல்; மாநில ஒருங்கிணைப்பாளர் திறந்து வைத்தார்


ஆலங்குளத்தில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தலை  மாநில ஒருங்கிணைப்பாளர் ஷோபனா திறந்து வைத்தார்.

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகில் பா.ஜ.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. ஒன்றியத் தலைவர்குமரகுருபரன் தலைமை வகித்தார். அன்புராஜ், அண்ணாவி ஆறுமுகம், சிவா, முன்னாள் ஒன்றியத் தலைவர் பண்டாரிநாதன், பேரூராட்சி கவுன்சிலர் வி.ஜி.எஸ்.கணேசன், அமைப்பு சாரா பிரிவு மாவட்டச் செயலாளர் லிங்கவேல் ராஜா, ஒன்றிய மகளிரணித் தலைவி நவரத்தினம் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஷோபனா சிறப்பு விருந்தினராக பங்கேற்று நீர் மோர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் குளிர்பானம் வழங்கினார். இதில் ஐடி விங் மாவட்டச் செயலாளர் ராஜன், மாயாண்டி, ஒன்றிய பொதுச் செயலாளர் நாகராஜா,  விளையாட்டு பிரிவு மாவட்டச் செயலாளர் ஒயிட் மோகன், வெட்டுபெருமாள், விஜயன், அருணாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments