சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மின்னஞ்சல் மூலம் பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தினர். அதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்து.
இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வெடிகுண்டு மிரட்டலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments