சென்னை ஆல்பா சிட்டி லயன் சங்கம் மற்றும் அரிமா சங்கத்தை ஒன்றிணைந்து நடத்திய அகவொளி திருமண விழா நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தனியார் திருமண மண்டபத்தில் சென்னை ஆல்பா சிட்டி லயன் சங்கம் மற்றும் அரிமா சங்கத்தை ஒன்றிணைந்து நடத்திய அகவொளி திருமண விழா 324ஜே மாவட்ட கவர்னர் ஏ.டி.ரவிச்சந்திரன் தலைமையில் தலைவர் லையன் பி.கிறிஸ்டி தேவகுமாரி ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக திருமண விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்களின் ஆணைக்கிணங்க பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர் 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், 5வது மண்டல குழு தலைவர் எஸ்.இந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு மாங்கல்யம் எடுத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் 52வது வார்டு மாமன்ற உறுப்பினர் எல்.பெரியநாயகம் முதலாம் துணை ஆளுநர் லயன் பி.மணிசேகர், இரண்டாம் துணை ஆளுநர் லயன் ஆர்.நரசிம்மன், இரண்டாம் துணை ஆளுநர் லயன் பி.ஜெயக்கொடி, மண்டல தலைவர் ஆர்-4 லயன் எஸ்.தனசேகரன், வட்டார தலைவர் இஸட்-1 லைன் டி.பரணிதரன், செயலாளர் லயன் இ.அமுதா, பொருளாளர் லயன் வி.லாவண்யா அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
No comments