• Breaking News

    புதுக்கோட்டை: நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா..... மாவட்ட ஆட்சியர் மு.அருணா பங்கேற்பு

     


    புதுக்கோட்டை மாவட்டம்,நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் தேர் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டார்.

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பெருந் திருவிழாவை முன்னிட்டு 23.03.205 அன்று பூச்சொரிதல் விழாவின் ஒரு பகுதியாக பக்தர்களால் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்ட பூக்கள் அனைத்தும் அம்பாளுக்கு சார்த்தப்பட்டு அதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா கலந்துகொண்டார். 

    இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, கோவில் செயல் அலுவலர் முத்துராமன்,குளத்தூர் வட்டாட்சியர் அ.சோனைகருப்பையா மற்றும் அரசு அலுவலர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    No comments