• Breaking News

    காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞரணி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது


    காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞரணி திமுக சார்பில் பல்லாவரம் தர்கா சாலையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பல்லாவரம் கோ.ஜானகிராமன் அவர்களின் தலைமையில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தலை காஞ்சி வடக்கு மாவட்ட கழகத் துணைச் செயலாளரும் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினருமான இ.கருணாநிதி அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், நுங்கு, மோர், ரோஸ் மில்க், பாதாம் மில்க், தர்பூசணி, கிர்ணி பழம், வெள்ளரிக்காய், ஆரஞ்சு பழம், வாழைப்பழம், திராட்சை, ஆகியவற்றையும் வழங்கினார்.

     இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவரும் பல்லாவரம் வடக்கு பகுதி கழக செயலாளர் இ.ஜோசப் அண்ணாதுரை,  பல்லாவரம் தெற்கு பகுதி கழக செயலாளர் இ.எஸ்.பெர்னார்ட்,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் பிகேஎஸ்.சத்திய பிரபு, மாமன்ற உறுப்பினர் மங்கையர் திலகம் ராஜ்குமார், வட்ட கழக செயலாளர் பி.ராஜ்குமார் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சரத் வெங்கடேசன், எஸ்.சாகுல் அமீது, மற்றும் பகுதி, மாவட்ட, மாநகர, நிர்வாகிகள் வட்டக் கழக செயலாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    No comments