ஏசி வேலை செய்யவில்லை..... சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் போராட்டம்
தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லக் கூடிய சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று இரவு 9 மணிக்கு 72 பேர் பயணம் செய்யக்கூடிய மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் ஏசி வேலை செய்யவில்லை. இதனால் ரெயிலை இயக்க விடாமல் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து ரெயிலை நிறுத்தினர்.
இதன்பின்னர் பயணிகள் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு ஏ.சி. சரி செய்யப்பட்டு 1½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.
No comments