கும்மிடிப்பூண்டி: கீழ் முதலம்பேடு ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் மின் கசிவால் குடிசை வீடு தீ விபத்து..... சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கிய ஆறுதல் கூறினார்.....
திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதி,கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,கீழ் மேல்முதலம்பேடு ஊராட்சியில் ஆதிதிராவிடர் காலனியில் குட்டிமணி உஷா ஆகியோர் வசித்து வந்த வீடு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அவரது குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
அதனை அறிந்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்கள் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிதி வழங்கி ஆறுதல் கூறினார் உடன் வட்டாட்சியர் சுரேஷ்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர்,முன்னாள் உள்ளாட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம் கழக நிர்வாகிகள் சுரேஷ் ஹரி அரசுத்துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments