சோழவரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சின்னம்பேடு கிராமத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமை தாங்கினார். அனைவரையும் சோழவரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும்,வழுதிகைமேடு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவருமான வழுதிகை நா.செல்வசேகரன் வரவேற்றார்.மு.பகலவன், வழக்கறிஞர் அன்பு வாணன் பி.ஜெ.மூர்த்தி,கே.வி.ஜி.உமாமகேஸ்வரி,பா.செ.குணசேகரன்,பி.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தலைமை இலக்கிய அணி இணைச் செயலாளர் ஈரோடு இறைவன் கலந்து கொண்டு தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்கான காரணம் என்ன? என்பதையும் தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் செய்து வருவதையும் எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றி பேசினார்.இதன் பின்னர்,பெண்களுக்கு சேலை,அரிசி,ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை,ஏழை எளியோருக்கு பேண்ட்-சர்ட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில்,மாநில, மாவட்ட,ஒன்றிய,நகர,பேரூர், கிளைகழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில், முன்னாள் சோழவரம் ஒன்றிய பெருந்தலைவர் ராஜாத்திசெல்வசேகரன், வடக்கு ஒன்றிய அவை தலைவர் சி.ஜெ.ரமேஷ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் து.சந்திரசேகர் மனோஜ் தன பிரபு ஆகியோர் நன்றி கூறினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சோழவரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும்,வழுதிகைமேடு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவருமான வழுதிகை நா.செல்வசேகரன் தலைமையில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments