தமிழக டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டது. இதனை தமிழக அரசு மறுத்த நிலையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு இதுவரை இரவில் சோதனையே நடத்தியது இல்லையா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதாவது அமலாக்கத்துறை இரவில் சோதனை நடத்தியதாக தமிழக அரசு கூறிய நிலையில் அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இப்படி ஒரு கேள்வியை எழுப்பியது. அதன் பிறகு அமலாக்கத்துறை அனுப்பிய மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம் கேட்ட நிலையில் இந்த வழக்கை ஏப்ரல் 8-ம் தேதிக்கு ஒத்துவைத்த நீதிமன்றம் ஒத்திவைத்தது.
0 Comments