• Breaking News

    பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் ரயில்வே மேம்பாலம் கீழ் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் தவிப்பு


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்து வருகிறது.கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது காலை முதலே மேகம் மூட்டமாக இருந்த நிலையில் சுமார் இரண்டு மணி நேரம் செய்த மழையால் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டு உள்ளது.

     ஆனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளனர் திருஆயற்பாடி பகுதியில் ரயில்வே மேம்பாலம் கீழ் மழைநீர் தேங்கியதால் அந்த வழியாக வந்த அரசு பேருந்து பாலத்தின் கீழ் பழுதாகி நின்றதால் பேருந்தில் இருந்த பெண்கள் பயந்து போய் தண்ணீரில் மூழ்கிய படி நீந்தி வந்தனர் இதனால் சுமார் ஒரு மணி நேரம் பேருந்துகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

    No comments