கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.... விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு....
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று மற்றும் நாளை கோயம்புத்தூரில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு நடிகர் விஜய் புறப்பட்ட நிலையில் தற்போது கோவை விமான நிலையத்தை வந்தடைந்தார்.
கோயம்புத்தூர் வந்த நடிகர் விஜய்க்கு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதை தொடர்ந்து நடிகர் விஜய் வாகனத்தில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு கிளம்பியுள்ளார். மேலும் நடிகர் விஜய் கோவையில் ரோட் ஷோ நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
No comments