செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், நாவலூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம், நாவலூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜாராம் தலைமையில் ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ,ஊராட்சி செயலர் வார்டு உறுப்பினர்கள் பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாவலூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜா ராம் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நமது ஊராட்சியில் ஏதாவது தண்ணீர் பிரச்சனை உள்ளதா என பொதுமக்களை கேட்டார்.
அதற்கு பொதுமக்கள் நமது ஊராட்சியில் தண்ணீர் பிரச்சனை எதுவும் இல்லை எல்லாம் நன்றாக உள்ளது என தெரிவித்தனர். இந்த கிராம சபை கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜாராம் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
0 Comments