நாளை கும்பாபிஷேகம்..... மருதமலை முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டு

 


கோவை மருதமலையில் சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நாளை (ஏப்ரல் 04) நடைபெற உள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மருதமலை அடிவாரத்தில் வேல் கோட்டம் தியான மண்டபம் உள்ளது. இதில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இதில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி வெள்ளியால் செய்யப்பட்ட, 4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் உள்ளது. நாளை கும்பாபிஷேக நடைபெறும் நிலையில், நேற்று இந்த வெள்ளிவேல் திருடு போனது. சாமியார் வேடத்தில், சென்ற நபர் ஒருவர் வெள்ளிவேலை திருடிச் செல்லும் சி.சி.டி.வி., காட்சி வெளியாகி உள்ளது.

இதன் அடிப்படையில் வெள்ளிவேலை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி பட்டப் பகலில் மருதமலையில் வேலை திருடி சென்ற சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments