• Breaking News

    பாஜகவுடன் கூட்டணி அரசு அமைக்கப்போவது கிடையாது..... எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

     


    தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதன் பிறகு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா அடுத்து வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறினார்.

    ஆனால் இதனை தற்போது எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் அவர்களுக்கு என்ன.? இது எங்கள் கட்சி. நாங்கள் யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.

    உள்துறை மந்திரி அமைச்சர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றுதான் கூறினாரே தவிர கூட்டணி அரசு அமைக்கும் என்று கூறவில்லை. நாங்கள் பாஜக உடன் கூட்டணி தான் வைத்துள்ளோம் தவிர கூட்டணி அரசு அமைக்கப்போவது கிடையாது. அமித்ஷா அப்படி சொல்லவே இல்லை என்று கூறினார். மேலும் இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றாலும் அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்படுத்தியுள்ளார்.

    No comments